தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்்றினார்.


பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம் புதியகுடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களை பெற்றுக்கொண்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க மழை நீர் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இந்த மண்டலத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைக்க பெற்றுள்ளது. அதனடிப்படையில் இந்த பணிகள் தொடர்கின்றன. வடகிழக்கு பருவமழை வருவதை யொட்டி முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஏற்கனவே அதிகாாிகளுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. குறிப்பாக கோரம்பள்ளம் குளம் நிறைந்து கடலுக்கு அந்த மழைநீர் வரும் பகுதியான அத்திமரப்பட்டி முள்ளக்காடு ேபான்ற பகுதிகளில் இருக்கின்ற வழித்தடத்தை முழுமையாக சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். கடந்த காலத்தில் 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்ததால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் 10 நாட்களில் அதை நாம் சாி செய்தோம் அதற்கு அடுத்த கட்டமாக தெருவிளக்கு கால்வாய் வசதி சாலை வசதி போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளோம் தற்போது நாம் செய்ய வேண்டிய பணி மழைகாலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பதற்கான அடிப்படை பணிகளை இந்த மண்டலத்தில் உள்ள அதிகாாிகள் உள்பட அலுவலர்கள் முழுமையாக தொிந்துகொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கினாலும் அதை மின்மோட்டாா் மூலம் விரைவாக அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சுகாதார பணிகள் அந்த நேரங்களில் தேவைப்படும் சொட்டு மருந்துகள் மூலம் முன்னெச்சாிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். சில பகுதிகளில் 24 மணி நேரமும் குடிதண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. 25 வீடுகள் இருக்கும் பகுதிகளில் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. 4 வீடு 3வீடு இருக்கும் பகுதிகளிலும் செய்த கொடுப்போம் 5000 சாலைகள் இருக்கும் பகுதியில் 3ஆயிரத்திற்கு மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நான் கொடுத்த வாக்குறுதிகளை 60 வார்டுகளிலும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். என்னை நீங்கள் நம்பலாம். என்று பேசினார்.
நிகழ்ச்சியில் இணையா் ராஜாராம், பொறியாளா் சரவணன், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பாளர் குருவையா, நகா்நல அலுவலர் வினோத்ராஜா, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, குழாய் ஆய்வாளர் நிக்சன், அதிகாாி ஆறுமுகம், கவுன்சிலா்கள் சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துைண அமைப்பாளா் விஜயகுமார், ஸ்பிக்நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளா் மாலாசின்கா, வட்டச்செயலாளர்கள் பிரசாந்த், செல்வராஜ், முத்துராஜா, முன்னாள்கவுன்சிலர்கள் நவநீதன், சாமுவேல்ஞானதுரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: தெற்கு மண்டலத்திற்குபட்ட பகுதியில் இரண்டு தினங்களாக ஏற்கனவே இருந்த பெயரை மாற்றும் செய்யக்கூடாது என்று ஓரு தரப்பினர் கலெக்டாிம் கோாிக்கை வைத்துள்ளனர். இன்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கோாிக்கை மனு அளித்தனர். அதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பொியசாமி சுந்தா்நகா் சுந்தரம் நகர் என்ற பிரச்சனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை அரசு சாா்ந்த பட்டியலில் என்ன பெயர் இருக்கிறதோஅதைதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாாிகளிடம் கடிந்து கொண்டார். அப்பகுதியில் இருக்கும் மின்வயர் செல்லும் டவரை மாற்ற வேண்டும் என்றும் சாலை வசதி கேட்டும் மனு கொடுத்த வர்களிடம் இசிஆா் சாலை பகுதியில் செல்வதால் அதை முறைப்படுத்தி செய்துகொடுப்பேன் டவர் மாற்றம் குறித்தும் நல்ல பதில் தரப்படும் என்ற கூறியபின் மூதாட்டி தான் கருணாநிதி நகர் பகுதியில் குடியிருப்பதாகவும் கடந்த மழை வௌ்ள காலத்தில் இடிந்து விழுந்த வீட்டிற்கு அரசின் சார்பில் ஏதுவும் வழங்க வில்லை. என்று மனுஅளித்த மூதாட்டியிடம் கனிவுடன் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக மேயர் கூறினார்.

