தூத்துக்குடி.
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட் சார்பில் ரூ. 13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கான்வாடி மையக் குழந்தைகளுக்கு கனிமொழி எம்.பி பிஸ்கட் வழங்கினார்.
மேலும், 27 லட்சத்தில் 80 கல்லூரி மாணவ – மாணவிகளுக்குக் கல்வி ஊக்கத் தொகையை வழங்கி, கனிமொழி எம்.பி பேசுகையில்: ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் இந்த தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களை வழங்கி வருகின்ற அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல மற்ற நிறுவனங்களும் தங்களுடைய பங்களிப்பை மக்களுக்கான உண்மையான திட்டங்களை உருவாக்கித் தருவதற்கு முன் வர வேண்டும்.

கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று, ஒரு காலகட்டத்தில் நமக்கு எல்லாம் கல்வி மறுக்கப்பட்டு, சில பேர் மட்டும் தான் படிக்க முடியும். சில பேருக்குப் படிப்பிற்கான உரிமையே கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த காலகட்டத்தைத் தாண்டி இன்று எல்லாருக்குமே கல்வி என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எல்லாருக்கும் கல்வி என்ற அந்த கனவை நிறைவேற்றிக் கொண்ட நிலையை நாம் உருவாக்கி உள்ளோம் ஆனால், அதையும் தாண்டி படிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதற்கு இன்று தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, நம்முடைய அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்குப் புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக உயர் கல்வி செல்லக்கூடிய பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இப்போது தமிழ் புதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரி முடிக்கப்படும் வரை வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் நன்றாக படிக்க தமிழ்நாடு அரசு தங்களின் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், நாம் எத்தனை மாணவர்களை படிக்க வைக்க முடியுமோ? அது தனிப்பட்ட முறையாக இருந்தாலும் அல்லது நிறுவனமாக இருந்தாலும், அந்த பணியை எல்லோரும் தொடர்ந்து செய்ய வேண்டும். கல்வி என்பது இந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சி என்று கனிமொழி எம்.பி பேசினார்.
பின்னர், தூத்துக்குடி பர்மா காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையை கனிமொமி எம்.பி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, தாசில்தார் ஞான்ராஜ், மாநகராட்சி பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், ஜே.எஸ்.டபிள்யூ துணைத் தலைவர் தென்னவன், மாநகர திமுக செயலாளர் அனந்த சேகரன், மண்டல தலைவர் அன்னலெட்சுமி, அரசு வழக்கறிஞர் ஆனந்த கப்ரியேல்ராஜ், கூட்டுறவு துறை இணை பதிவாளர் முரளி கண்ணன், கூட்டுறவு சரக துணை பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, வைதேகி, சுப்புலெட்சுமி, ஜெயசீலி, பவானி, சந்திரபோஸ், கனகராஜ், ராமர், பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ஜான், இசக்கிராஜா, விஜயக்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, நாகராஜன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இராஜா, மாநகர துணை செயலாளர் பிரமிளா, மாநகர சிறுபாண்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, பொன்னுச்சாமி, சதீஸ்குமார், செந்தில்குமார், மந்திரகுமார், மனோ, கங்காராஜேஷ், கருப்பசாமி, செல்வராஜ், சிங்கராஜ், முத்துராஜா, வட்ட பிரதிநிதிகள் புஷ்பராஜ், வேல்முருகன், பாஸ்கர், மகளிரணி ரேவதி, சந்தனமாரி, கன்னிமரியாள், டோலி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, நகர்புற குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டஸ், மாவட்ட திட்ட அலுவலர் காயத்ரி மற்றும் மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், பசுமை பண்ணை காய்கனி அங்காடி மேலாளர் ராஜதுரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி திறப்பு விழாவில் கல்லூரி மாணவி ஜெய்ஸ்ரீ, முத்துமுருகேசன், ஆகியோர் நன்றி கூறினார்கள்.

