தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார்.
இந்நிலையில் முத்தையாபுரம் ரவுன்டானாவில் புதிய உயர் கோபுர மின்விளக்கை மேயர் ஜெகன் பொியசாமி இயக்கி வைத்து கூறுகையில் “தூத்துக்குடி மாநகரம் பல்வேறு தொழிற்சாலை நிறைந்து பகுதியாகும் இங்கு கப்பல் விமானம் தரை வழி போக்குவரத்து வசதிகளை உள்ளடக்கி தென்னிந்தியாவிலேயே வளர்ந்து வரும் மாநகராட்சியாக உருவாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்த செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை வசதி, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இணைக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தொழில் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நொிசலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வசதியாக மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகள் மற்றும் பைபாஸ் சாலைகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் பாதசாாிகள் மற்றும் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஓய்வு எடுத்து செல்ல அனைத்து வசதிகளுடன் கூடிய இயற்கை புல்வௌியுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதலாக புதிய உயா் கோபுர மின்விளக்கு தூண் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அதன் எதிர்புறமும் ஒரு உயர்மின் விளக்கு ஒன்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒன்றும் வரும் காலங்களில் அமைக்கப்படும் என்று தொிவித்தார்.”
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் முத்துவேல், வைதேகி, வட்ட செயலாளர் பிரசாந்த், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

