சென்னை, ஆகஸ்ட் 6
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல் நகராட்சி ஆணையர்கள் உட்பட 25 அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது.
கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், அதிரடியாக இடம் மாற்றம் செய்து விழுப்புரம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் கொடைக்கானல் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கொடைக்கானல் நகராட்சியில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் இருந்து வந்ததாகவும்
கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், வாகன நிறுத்துமிடம் போன்றவற்றை பொதுஏலம் விடாமல் தனிச்சையாக செயல்படுவதால் கொடைக்கானல் நகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி, பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும். எனவும்
அதுபோல்
கொடைக்கானல் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்களில் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த தவறி வருவதால், ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் புதிய புதிய கடைகள், கட்டிடங்கள் உருவாகி வருகின்றன.
இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நகராட்சிகளுக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட முன்வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பொதுமக்களின் ஆதரவோடு நடைபெற்றது. மேலும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து
வரும் நிலையில்
கொடைக்கானல் நகராட்சி சீர்கேட்டை ,
சீர் செய்வதற்காக
அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளார் புதிய ஆணையர் வீரக்குமார் என்றும் கோடை மக்கள் மத்தியில் பேசப்படுகிறது . புதிய ஆணையர் வீரக்குமார்
இவர் காரைக்குடியில் பணியாற்றும் போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் காரைக்குடி நகராட்சியை சிறந்த முறையில் தனது நிர்வாக திறமையால்
மாற்றிக் காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கொடைக்கானல் நகராட்சியில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் தலை தூக்கி வந்ததால்
பல்வேறு சவால் மிக்க பணிகள் மேற்கொள்ள வேண்டியது இருப்பதால் கொடைக்கானல் நகராட்சி ஆணையராக வீரக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆணையர் பொறுப்பேற்றவுடன் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை களைய சீர் செய்ய வேண்டிய பணி ஏராளமாக உள்ளது. என்று கூறப்பட்டுள்ள நிலையில் புதிய ஆணையர் வீரக்குமார் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் சவாலான பிரச்சனையை சமாளிக்க தனது அதிரடி வியூகத்தை காரைக்குடி நகராட்சியில் செய்தது போல்
மீண்டும் கொடைக்கானல் நகராட்சியில் செய்வார் ? என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆணையரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி தொகுப்பு கோடை வி ஆனந்த்..

