தூத்துக்குடி
தமிழக அரசு ஊராட்சி பகுதியை மேம்படுத்தும் வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு குடிசையில்லா ஊராட்சியை உருவாக்கும் வகையில் கலைஞாின் “கனவு இல்லம்” திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு அதில் விண்ணப்பங்களை அதிகாாிகள் பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டனர். மனு அளித்தவர்களின் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாப்பிள்ளையூரணி ஊராட்சி கூட்டரங்கில் தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தாா். ஓட்டப்பிடாரம் மேற்கு ஓன்றிய திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சண்முகையா 41 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். பின்னர் பயனாளிகளிடம் திமுக கட்சிக்கும் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஸ்டாலின் அரசுக்கும் துணையாக இருந்து ஆதரவு கேட்டுக்கொண்டார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, ஓன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், தொம்மை சேவியா், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், ஜேசுராஜா, ஓன்றிய திமுக துணைச்செயலாளர் கணேசன், ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், கிளைச்செயலாளர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், இளைஞர் அணி கௌதம், கப்பிக்குளம் பாபு பயனாளிகள் உள்பட ஊராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.

