தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் டூவிபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் ரேஷன் அாிசியின் தரம் எப்படி இருக்கிறது. என்பதை ஆய்வு செய்த அமைச்சர் புதியதாக தற்போது கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக வழங்கப்படும் கோதுமை மாவு எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார்.
பின்னர் சேமியா உள்பட பொருட்களை எடுத்து ஆய்வு செய்தார். துவரம்பருப்பு பாமாயில் போன்ற பொருட்கள் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். பாமாயில் துவரம்பருப்பு முழுமையாக வழங்கப்பட்டு வருவதாக ஊழியர் கூறினாா்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் அதிஷ்டமணி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.
.

