• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

policeseithitv by policeseithitv
July 30, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம் துணை மேயா் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்்றினார்.

மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இன்று நான்காவது மண்டலமாக இங்கு நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைக்க பெற்றுள்ளது. அதனடிப்படையில் இந்த பணிகள் தொடர்கின்றன. குறிப்பாக சொத்துவாி குடிதண்ணீர் வகையில் பெயர் மாற்றம் முகவாி மாற்றம் போன்ற குறைபாடுகள் உள்ள மனுக்களுக்கு உடனடியாக இங்கு தீர்வு காணப்படுகிறது. இதுவரை மாநகராட்சி பகுதியில் 2500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் சாலையை பொறுத்தவரை கல்லூாி பள்ளி மருத்துவமனை கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த பணி நடைபெறுகிறது. இங்கு சாலை கால்வாய் போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை ஆய்வு மேற்கொண்டு அது படிப்படியாக நிறைவேற்றப்படும். முத்தையாபுரம் உப்பாற்று ஓடைமுதல் முள்ளக்காடு வரை பொதுமக்கள் நல்ன கருதி புதிதாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஹைமாக்ஸ் லைட்கள் கோவை சென்னையை போல் அமைக்கப்பட்டுள்ளன. இதே பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்வதால் அந்த இருபகுதிகளிலும் மாநகராட்சிக்குாிய இடங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அந்த கட்டமைப்பு பணிகளையும் உருவாக்கி வருகிறோம். பொதுமக்கள் பாதுகாப்பையும் கருதி மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மறுவாழ்வு மையம் என்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இதே பகுதியில் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்ேவறு அமைப்புகளும் வைத்த கோாிக்கையை ஏற்று ஜேஎஸ் நகர் பகுதியில் ஓரு பூங்கா அமையவுள்ளது. அதே போல் மழை காலங்களில் கோரம்பள்ளம் குளம் நிரம்பி வந்தால் இந்த பகுதி வழியாக உப்பாற்று ஓடை கடந்து கடலுக்கு செல்லும் அதில் கிழக்கு பகுதியில் 300மீட்டர் அகலமும், மேற்கு பகுதியில் 170 மீட்டர் அகலமும் இருக்கும் வகையில் அதை முறைப்படுத்தியுள்ளோம் எந்த மழை வந்தாலும் இதில் தேங்காத படி செல்லும் வகையில் பணிகளை செய்துள்ளோம் இங்கு ெகாடுக்கப்படுகின்ற அனைத்து மனுக்களுக்கும் 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு அதற்கான தகவல்களை மனுதாரர்களுக்கு தொிவிக்கப்படும். என்று பேசினார்.

பின்னர் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பு பொதுமக்கள் கோாிக்கை மனுக்களை வழங்கிய நிலையில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துமாாி தங்களது பகுதியில் புளுக்கலர் பைப்லைன் போட்டபின்பு சாியாக குடிதண்ணீர் வரவில்லை பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறன்றன. என்ற கோாிக்கை மனுவை வழங்கினார். புறநகர் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் முனியசாமி அப்பகுதியில் புதிய தார்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோாிக்கை மனுவையும் வழங்கினார். இந்த முகாமில் 126 மனுக்கள் பெற்றுக்கொண்டதில் பெயர் மாற்றம் கோாிய 4 பேருக்கு மேயர் ஜெகன்பொியசாமி உடனடியாக ஆணை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலர் குருவையா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலா்கள் வைதேகி, சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், ஊராட்சி ஓன்றிய குழு துணைத்தலைவா் ஆஸ்கா், வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி துைண அமைப்பாளா் விஜயகுமார், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், நடேசன் டேனியல், பிரசாந்த், முத்துராஜா, வசந்தி பால்பாண்டி, மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், இலக்கிய அணி துணை தலைவர் நலம்ராஜேந்திரன், ஸ்பிக்நகர் பகுதி மகளிர் அணி செயலாளர் மாலாசின்கா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு!!

Next Post

தூத்துக்குடி 34வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
தூத்துக்குடி 34வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி 34வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In