• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு!!

policeseithitv by policeseithitv
July 27, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் பொருத்தினால்  குடிநீர் இணைப்பு துண்டிப்பு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஜூலை,27.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்
என எச்சரித்த நிலையில் ஊராட்சி நிா்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியாக இருந்து வருகிறது. அந்த ஊராட்சியில் ஏழை எளிய நடுத்தர என வாக்குாிமை பெற்றவர்கள் சுமார் 40 ஆயிரம் பேரும் 1 லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றன. வளர்ந்து வரும் ஊராட்சி பகுதியில் முழுமையான அரசு திட்டங்களும் , கட்டமைப்பு பணிகளும் நடைபெறும் வண்ணம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படியும் சண்முகையா எம்.எல்.ஏ ஆலோசனை படி அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி அடிப்படை தேவைகள் அனைத்தும் பூா்த்தியாகும் நிலை தொடர்கிறது.

அதே சமயத்தில் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிதண்ணீர் வழங்கப்படும் வகையில் இணைப்புகள் கொடுக்கப்பட்டு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக மாப்பிள்ளையூரணிபகுதியில் குடிதண்ணீர் பல குடியிருப்புகளுக்கு சாியாக வரவில்லை என்ற புகார் பொதுமக்களிடமிருந்து தொடா்ர்ந்து வந்ததையொட்டி குடிநீர் விநியோக பணியாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட இணைப்புகளில் அரசு விதிமுறைகளை மீறி. பலரும் மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீா் எடுக்கப்பட்டதால் அதிக திறன் கொண்ட மோட்டார் மூலம் நீர் உறிஞ்சுவதால் மற்ற நபர்களுக்கு குடிநீர் சப்ளை வெகுவாக குறைந்து விடுகிறது குறிப்பாக ஒரு தெருவில் மின் மோட்டார் உள்ள ஒரு வீட்டுக்கு குடி தண்ணீர் வருகிறது அதே சமயத்தில் பக்கத்து வீட்டுக்கு குடித்து தண்ணீர் சரியாக வருவதில்லை இதற்குக் காரணம் விதிமுறைகளை மீறி மின் மோட்டார் பயன்படுத்துவதால் தான் இந்தப் பிரச்சனை என்பது தெரியவர மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம் சாா்பில் அதுபோன்ற முறையற்ற மின்மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீடு முதல் அனைத்து தரப்பு மக்கள் இல்லங்களிலும் பாரபட்சமின்றி ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி மின்மோட்டார் இணைப்புள்ள வீடுகளில் குடிதண்ணீர் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இந்த அதிரடி ஆய்வு ஊராட்சி பகுதியில் உள்ள அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்கும் வரை இந்த ஆய்வு தொடரும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், செயலாளர் ஜெயக்குமாா், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வாி, பாரதிராஜா, தங்கமாாிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளார் கணேசன், கிளைச்
செயலாளர் காமராஜ், உள்பட ஊராட்சி பணியாளர்கள் பலர் உடன் சென்றனர். இந்த அதிரடி ஆய்வுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

வசதி உடைத்த ஒரு சிலர் மின்மோட்டார்கள் பொருத்துவதால் பல ஏழை எளிய மக்களுக்கு குடிநீர் முறையாக சப்ளை நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

Previous Post

நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது டெல்லி நாடாளுமன்றத்தில் தான் இருக்கிறோமா அல்லது சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கின்றோமா என எண்ணத்தோன்றியது. தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி ஒன்றிய அரசு மீது கடும் தாக்கு

Next Post

தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

Next Post
தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In