• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் ெபாியசாமி, கலெக்டர் லட்சமிபதி, எஸ்.பி பாலாஜி சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
July 27, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் ெபாியசாமி, கலெக்டர் லட்சமிபதி, எஸ்.பி பாலாஜி சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி

உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் திருவிழாவாக நடைபெறும். அதன்படி கடந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தங்கத்தேர் திருவிழா நடைபெற்றது.

இந்த ஆண்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. இதனை முன்னிட்டு ேநற்று 25-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை 7.00 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் ஏற்றி வைத்தார். பின்னர் 9.30 மணிக்கு திருப்பலி நடைபெற்று பகல் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடத்திைன முன்னாள் பங்குதந்தை குமார்ராஜா அணிவித்தார்.

திருவிழா நாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு செபமாலை, 5 மணிக்கு முதல் திருப்பலி, 4.45 மணிக்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 மணிக்கு செபமாலை, மாலை 3 மணிக்கு செபமாலை, மறையுரை, இரவு 7.15 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலி நடைபெறும். மேலும், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பல்வேறு பங்கு இறைமக்கள் திருயாத்திரையாக வந்து திருப்பலி நிறைவேற்றுவார்கள். வருகிற 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 3-ம் திருவிழா அன்று புதுநன்மை விழா மற்றும் நற்கருணை பவனி நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படும். மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் திருவிழா அன்று மாலை 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருப் பணி நடைபெறுகிறது. 5ம் தேதி 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், 7.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும் 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும் காலை 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும், பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நகர வீதிகளின் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஓப்புக் கொடுத்தல் நற்கருகணை ஆசீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பனிமயமாதா ஆலயத்திருவிழா மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீணவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் பவாணிமார்ஷல், மெட்டில்டா, ரிக்டா, ரெக்ஸின், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, வட்டச்செயலாளர்கள் டென்சிங், அன்டோ, ரவிச்சந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் பாஸ்கர், கருணா, அல்பட், மணி, பிரபாகர், ஜோஸ்பர், அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சுரேஷ் பர்னாந்து, பரதர் நலசங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, பொதுச்செயலாளர் இன்னாசி, குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன்கில்ட், முன்னாள் கவுன்சிலர்கள் அருள், செந்தில்குமார், மற்றும் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள், கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பாலன், பனிமய மாதா அன்னை பேராலய பங்கு மேய்ப்பு பணிக்குழுவை சேர்ந்த துணைத்தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின்பாண்டியன், துணைச்செயலாளர் பெனார்ட், பொருளாளர் ஜோசப்சொாீஸ், அருட்சகோதரர் தினகரன், மற்றும் பங்குப் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பிகள், 5 டிஎஸ்.பிகள், 15 இன்ஸ்பெக்டர்கள் 35 எஸ்ஐக்கள் மற்றும் 900க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயவளாகம் அருகே தற்காலிகமாக கண்காணிப்பு கோபுரங்கள் போலீசார் அமைத்துள்ளனர்.

 

பாக்ஸ்: பனிமய மாதா ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், உள்ளிட்ட பல பொருட்கள் ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடிமரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

Previous Post

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post

நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது டெல்லி நாடாளுமன்றத்தில் தான் இருக்கிறோமா அல்லது சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கின்றோமா என எண்ணத்தோன்றியது. தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி ஒன்றிய அரசு மீது கடும் தாக்கு

Next Post
நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது டெல்லி நாடாளுமன்றத்தில் தான் இருக்கிறோமா அல்லது சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கின்றோமா என எண்ணத்தோன்றியது. தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி ஒன்றிய அரசு மீது கடும் தாக்கு

நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது டெல்லி நாடாளுமன்றத்தில் தான் இருக்கிறோமா அல்லது சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கின்றோமா என எண்ணத்தோன்றியது. தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி ஒன்றிய அரசு மீது கடும் தாக்கு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In