தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வியாழன் அன்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோமதிபாய் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, போல்பேட்டை, குட்டி சங்கரபேரி ஆகிய பகுதியில் வீட்டு மனைகளுக்கு இது காலம் வரை பட்டா கிடைக்கப்படவில்லை என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன்; அப்பகுதி பொதுமக்களிடமிருந்து 325 மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
மேற்படி மனுக்களை உடனடியாக தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் பரிசீலனை செய்து, அதில் 110 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கிட இணையதளம் வழியாக பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீதமுள்ள 225 மனுக்கள் பரிசீலனை செய்தும், தள ஆய்வு செய்தும் ஒரு வார காலத்திற்குள் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்;.

