தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வெற்றிவேல்புரத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு அமைச்சர் கீதாஜீவன் சாமி தரிசனம் செய்தார்.
இவ்விழாவில் வட்டச் செயலாளர் கருப்பசாமி கவுன்சிலர் சுதா மற்றும் மணி அல்பட், கோவில்நிர்வாகிகள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

