தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் *பெருந்தலைவர் காமராஜர்* அவர்களின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் தேவர் புறம் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் உருவப்படத்திற்கு மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி பெருந்தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் காய்கனி மார்க்கெட், பழைய மாநகராட்சி அலுவலகம், வ.ஊ.சி மார்க்கெட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


பின்பு பிரையண்ட்நகர் 2வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அங்கிருந்து துவங்கிய 122 பால்குடம் ஊர்வலத்தில் சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிகளில்
நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் மாவட்ட இளைஞரணி செயலாளர் பசும்பொன் முருகன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவை தலைவர் மதியழகன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் துணைச் செயலாளர் ஜேசு செல்வி, ராணி, பொன்ராணி, சமூக சேவகி சந்திரா மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் சங்கரன் மற்றும் மாநகர நிர்வாகிகள் பொன் சுகுமார் ,ஐசக் செல்வகுமார், பொன் சுப்பையா, செல்வராஜ், சண்முக குமார், துரைச்சாமி, ஆதியப்பன், குணசேகர், ராமஜெயம் ,ஜெயமாரிஉள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

