தூத்துக்குடி
தமிழ்நாடு காலநிலை மாற்றம் பணி, ஐஐஹச்எஸ் இந்தியன் நிறுவனம் மனித குடியிருப்புகள் ஆகிய இரு நிறுவனங்களுடன் அகில இந்திய கட்டுனர் சங்கமும் இணைந்து தனியார் ேஹாட்டலில் வைத்து இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான பசுமை கட்டிடங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது சம்பந்தமாக திறன்மிகு வாழ்விடம் பற்றிய ஓருநாள் கருத்தரங்கை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் துவக்கி வைத்து பேசினார்.
கருந்தரங்கில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சோி அந்தமான் நிக்கோபர் தீவுகளின் மாநிலத்தலைவர் பழனிவேல், மாநில கிரீன் பில்டிங் கமிட்டியின் சேர்மன் சொக்கநாதன், பியோ, அகில இந்திய கட்டுநர் சங்கம் தூத்துக்குடி மையத்தலைவர் முஜாஹித்அலி, மையச்செயலாளர் மகாராஜன், முன்னாள் தலைவர்கள் உள்பட மையத்தின் உறுப்பினர்கள் 75 பேர் கலந்து கொண்டனர்.

