தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர், ராம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற புதிய வடிகால் பணிகளையும் நீர் வெளியேற்றுவதற்காக புதிய வடிகால் பணிகள் ஆரம்பமாகப் போகும் பகுதிகளையும் மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, போல்பேட்டை பகுதி பிரபாகர், உள்பட பலர் உடனிருந்தனர்.

