தூத்துக்குடி
தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் 15ம் தேதி காமராஜர் பிறந்தநாளில் முதலமைச்சாின் காலை உணவு திட்டம் விாிவுப்படுத்தப்பட்டு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இதனையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி டி.சவோியார்புரத்திலுள்ள ஆர்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு தனிக்கை அழகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் சிறப்பு கிராமசபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் தலைமை வகித்து பேசுகையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனையோடு இந்தியாவின் எதிர்கால தலைமுறையினாின்நலன்கருதி கல்வியின் மூலம் மாணவ மாணவியர்கள் முன்னேற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியதை கணடா நாட்டிலும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்ததிட்டத்தை பாராட்டி பல உலகநாட்டு தலைவர்கள் முதலமைச்சர் தளபதியாரை வெகுவாக பாராட்டியுள்ளனர். பல மாநிலங்களும் தமிழகத்தின் திட்டங்களை பின்பற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. காமராஜர் பிறந்தநாளன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நான்குஇருந்து வருகின்றன.
அந்த பள்ளியில் இந்த திட்டத்தை அனைத்து அதிகாாிகளும் நல்லமுறையில் சிறப்பாக செய்து கொடுத்து தமிழக அரசுக்கு முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி இதற்கு தேவையான உதவிகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம் முழுமையாக செய்து கொடுக்கும் என்று பேசினார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி ஊராட்சி துணை அலுவலர் மகேஸ்வாி, பள்ளியின் தாளாளர் குழந்தை ராஜன் அடிகளார், தலைமை ஆசிாியர் மாிய செல்வராணி, ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, வட்டார வளர்ச்சி சத்துணவு மைய பயிலுநர் அனிதா, அமைப்பாளர் எஸ்தர், சமூக ஆர்வலா் அந்தோணி பபியான், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

