தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து முண்டியம்பாக்கம் ஊராட்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட_ செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆலோசனைபடி பாகம் எண் 215 உட்பட்ட வடிவேல் முதலியார் தெரு, பெரியார் தெரு, கம்பன் தெரு, கண்ணதாசன் தெரு, ஆலை ரோடு, கணபதி நகர், சாஸ்தா நகர், ஆலை குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கோவில்பட்டி நகர செயலாளரும் நகர் மன்ற தலைவருமான கருணாநிதி, கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளரும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான கழுகுமலை சுப்பிரமணியன் ஆகியோர் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.

