தூத்துக்குடி மாநகராட்சி மேயரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி தனது பிறந்தநாளையொட்டி போல்பேட்டையில் உள்ள தனது தந்தையாரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான என் பெரியசாமியின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கிய பின் தாயாாிடம் ஆசி பெற்று போல்பேட்டை அலுவலகத்தில் நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.



அப்போது கலந்துரையாடலின் போது திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 37 மாத ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்தியாவில் நம்பர் ஓன் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மாநிலத்தில் பல திட்டங்களையும் கொள்கைகளையும் பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி உருவாகுவதற்கு காரணமாக இருந்து இந்தியாவை உள்ளடக்கிய தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களின் நட்புறவோடு கலைஞாின் கொள்கைகளை தூக்கி பிடித்து தொடா்ந்து பணியாற்றி வரும் தளபதியார் 2026ல் நாடாளுமன்ற தேர்தலின் போது 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். நாம் செய்த சாதனைகளை எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்று நிர்ணயித்த இலக்கை விட அதிகமான தொகுதியில் வெற்றி பெற அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். மாநகராட்சி பகுதியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று 27 மாத காலத்தில் எண்ணில் அடங்காத பல பணிகளை செய்துள்ளேன். இவற்றையும் மக்களிடம் கொண்டு சோ்த்து தொடர் வெற்றியை பெறுவதற்கு எல்லோரும் இணைந்தே பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, லாரி புக்கிங் ஏஜெண்ட் சங்கதலைவர் சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜாண்அலெக்சாண்டர், ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, அரசு வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, துைண அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுயம்பு, கந்தசாமி, முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜன், சரவணகுமார், தெய்வேந்திரன், தலைமை பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், நாராயணன், ஏசுவடியான், சேர்மபாண்டி, செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, பெரியசாமி, இசக்கிமுத்து, நிர்வாகிகள், ஆவுடையப்பன், மாரியப்பன், முத்துதுரை, அருணகிரி, மாநகர வக்கீல் அணி தலைவர் நாகராஜன்பாபு, தொமுச பேச்சிமுத்து, வட்டச்செயலாளர்கள் சுரேஷ், காளித்துரை, ஜோஸ்பர், பிரபாகர், பாலா, ராம்குமார், லிங்கராஜா, மற்றும் மதிமுக மகாராஜன் பொன்ராஜ் மற்றும் தன்பாடு சங்க நிர்வாகிகள் மற்றும் நயினார் தங்கமாரியப்பன், லாரன்ஸ், பெரியசாமி, ரமேஷ் ஜாண்சிங், ஜெயபாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, சுப்புலட்சுமி, சுதா, ஜான்சிராணி, நாகேஸ்வாி, வைதேகி, பவாணி , காங்கிரஸ் கவுன்சிலர் எடின்டா, கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தனலட்சுமி, மதிமுக கவுன்சிலர் ராமு அம்மாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், உள்பட அரசுத்துறை அலுவலர் வாழ்த்துதொிவித்தனர்.

