• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் : கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டு பொதுமக்கள் 110 பேர் பஞ். தலைவர் சரவணகுமாரிடம் மனு அளித்தனர்.

policeseithitv by policeseithitv
June 30, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் :  கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டு பொதுமக்கள் 110 பேர் பஞ். தலைவர் சரவணகுமாரிடம் மனு அளித்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி, ஜூன்,30.

 

கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தில் பயன்பெற 30/06/24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக “கலைஞர் கனவு இல்லம்” எனும் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குடிசையில் வசிக்கும் மக்களுக்கு புதிதாக வீடு கட்டி தரும் பொருட்டு 2024-25-ஆம் நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

மேலும் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சீரமைக்க வேண்டியுள்ள வீடுகளை கொண்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டு பழுதின் அடிப்படையில் சீரமைத்து தரும் பொருட்டு ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டம் 2024-25- ஆம் ஆண்டிற்கு செயல்படுத்தப்படுகிறது.

எனவே, “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடுகட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த வீடுகளைக் கொண்ட பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை ஒப்புதல் பெற 30.06.2024 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூ ரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பணி உதவியாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். இந்த சிறப்பு கூட்டத்தில் கிராம மக்கள்

பெரும்பாலானோர் பங்கேற்று

கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடுகட்ட அனுமதி கேட்டு பயனாளிகள் சுமார் 110 பேர் மனுக்கள் அளித்தனர். இந்தக் கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி கௌதம், உட்பட்ட ஏராளமான பங்கேற்றனர். தாளமுத்து நகர் போலீசார்கள் இந்த கூட்டத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ெகாடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post

கலைஞர் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உணவு வழங்கினார். 

Next Post
தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ெகாடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கலைஞர் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உணவு வழங்கினார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In