தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி, சூழற்சி முறையில் 60வது வாா்டு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும் என்று மேயா் ஜெகன் ெபாியசாமியிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்
தூத்துக்குடி மாநகராட்சி 36 வது வார்டுக்குட்பட்ட ராமசாமிபுரத்தில் தார்சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினர் நாகராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொன்ட மேயர் ஜெகன் பொியசாமி மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது அந்த பகுதியில் தார்சாலை அமைப்பதற்கு ஏற்கனவே டென்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன் மக்களை பற்றி சிந்திப்பதும் மக்கள் பணி செய்வதும் தான் எங்களது கடமை என்று கூறினார்.
மாநகர செயலாளர் முத்து, கிளை செயலாளர் மனோகரன், மாநகரக்குழு நிா்வாகிகள் காஸ்ட்ரோ, வேல்முருகன், சதாசிவம், முருகன், அனுசுயா, ஜான்சி, உட்பட பொதுமக்கள் கலந்து கொன்டனர்.

