அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர்
கீதா ஜீவன் உள்ளிட்ட அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பளித்து இருந்தது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2,31,87,000 மதிப்பிலான சொத்துச் சேர்த்ததாக, கடந்த 2002, அ.தி.மு.க ஆட்சியில் என்.பெரியசாமி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
இதையடுத்து கடந்த 2003, ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக என்.பெரியசாமி சேர்க்கப்பட்டார். இரண்டாவதாக அவரின் மனைவி எபனேசர், மூன்றாவதாக மூத்த மகன் ராஜா, நான்காவதாக இளைய மகன் ஜெகன் (தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர்), ஐந்தாவதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், ஆறாவதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

