தூத்துக்குடி, ஜூன்,23.
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் இல்லத்திருமண விழா நாகர்கோவிலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜாராம். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம்,
நாகர்கோவில், குஞ்சன்விளை ஆகும்.
ராஜாராம் – ராணி தம்பதியரின் மகன் கிஷோர்
சுலேகா டாட் காம் நியூ மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சென்னை வாழ் தூத்துக்குடி மாவட்டம், மீனாட்சிபுரம்- ராஜா பாக்கியலட்சுமி அவர்களின் மகள் பவித்ரா தேவிக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது , நாகர்கோவில், முகிலன் விளை ஆர்ஜிஎன் மஹாலில் வைத்து இன்று (23.06.2024) திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருமண வரவேற்பு விழாவிற்கு கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காவல்துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
காலை தீபம் நாளிதழ், போலீஸ் செய்தி நியூஸ் சேனல், செய்தி ஆசிரியர்
மூத்த பத்திரிகையாளருமான எம்.ஆத்திமுத்து, பிரஸ்கிளப் உறுப்பினரும் போலீஸ் டுடே செய்தியாளருமான ராஜு உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள்
M.கந்தகுமார் சமூக சேவகர்
V.குமாரவேல் வழக்கறிஞர்
நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் காவல் ஆய்வாளர் ராஜாராம் – ராணி தம்பதியினர்
ஷீஜா-பெரிஸ்கர் ஆகியோர் வரவேற்றனர்.

