தூத்துக்குடி
இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ல் ஆரம்பித்து ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டமாக 543 தொகுதிகளுக்கு இந்தியா முழுவதும் நடைபெற்றது. 10 ஆண்டுகாலமாக தொடர்ந்து பிரதமர் பதவியில் பணியாற்றிய மோடி மீது இந்தியா கூட்டணி 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடுமையான விமா்சனங்களை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். முக்கிய தலைவர்கள் எல்லோரும் ஓரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு களம் கண்டனர். அதில் பலர் வெற்றி பெற்றனர். சிலர் தோல்வி அடைந்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அவா்களது குடும்ப ெசாந்த தொகுதியான ேரபரேலி ேகரளமாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார், இந்தியாவை 2024ல் மக்களவை ேதர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆளும் கட்சியாக பொறுப்பேற்று இந்திய மக்களை பாதுகாப்போம். என்று கூறிய திட்டம் நிறைவேறாமல் சென்றது. மீண்டும் 3வது முறையாக கடந்த இரு தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த தண்ணிகரில்லாத தலைவராக பிரதமர் மோடி பணியாற்றிய நிலையில் இப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த நித்திஸ்குமார், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சந்திரபாபுநாயுடு, இருவர் முக்கிய பங்காற்றி கூட்டணி ஆட்சிக்கு துணையாக இருந்தாலும் 11கட்சிகள் இனைந்த கூட்டணி ஆட்சிதான் பொறுப்பேற்றுள்ளது. இதில் ஓவ்வொரு மாநில கட்சி தலைவர்களுக்கும் மாநில கொள்கை என்று ஓன்றை வகுத்து அதன்படி பணியாற்றுவார்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆர் எஸ் எஸ் இணைந்து அவர்கள் ஓரு கொள்கையை வைத்திருப்பார்கள் இதை நாடுமுழுவதும் செயல்படுத்த முற்படும் போது தடைகற்களாக இந்த 11 கூட்டணி கட்சி தலைவர்களில்சிலர் உருவாகுவார்கள் இந்த நிலை வரக்கூடும் கடந்த காலத்தில் சபாநாயகா் தேர்வில் போட்டியில்லை துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்க வில்லை. எதிர்கட்சி தலைவர் மக்களவையில் இல்லை இன்று அந்த நிலை எல்லாம் மாறியுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள ஆட்சி எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த பல கட்சி தலைவர்கள் இன்று வரை கூறிவருகின்றனர். இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல்காந்திக்கு கடந்த காலத்தில் கைக்கொடுத்த வயநாடு தொகுதியை இந்த முறை ராஜினாமா செய்து மக்களவை செயலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் பொதுச்ெசயலாளர் பிாியங்கா காந்தி போட்டியிட தயாராகி வருகிறார். ஹிந்தி பேசும் வடமாநிலங்களில் ராகுல்காந்தியும் தென்மாநிலத்தில் பிாியங்கா காந்தியும் மக்கள் பிரதிநிதியாக இருந்து பணியாற்றினால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியும் வலிமையும் கிடைக்கும் என்ற அடிப்படையில் முடிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் 543 மக்களவை தொகுதிக்கும் நடைபெற்ற ேதா்தலில் மக்களின் வாிப்பணம் பல கோடிகள் செலவு செய்து அதிகாாிகள் பணியாற்றி மக்களை தேடி அரசியல் கட்சிகள் தனது பங்களிப்பை செய்த சூழ்நிலையில் ஓரு தொகுதியில் ராஜினாமா செய்யப்பட்டு மீண்டும் அந்த தொகுதியில் அவரது தங்கை களம் இறங்குகிறார் என்ற தகவல் இந்தியாவையும் கடந்து வௌிநாடுகள் முழுவதும் பரவியுள்ள சூழ்நிலையில் பொதுத்தேர்தலில் ஏற்பட்ட செலவினத்தை விட இடைத்ேதா்தலில் கூடுதல் செலவினம் தேவைப்படும் இந்த இடைத்தேர்தலுக்கான செலவினத்தை ராகுல்காந்தி ஏற்றுக்கொள்ள வேண்டும் அதே வேலையில் பொதுத்தோ்தலில் எளிதில் காங்கிரஸ் வயநாடு தொகுதியில்வெற்றி பெற்றதை போல் இடைத்தோ்தலில் எதிர்பார்க்க முடியாது காரணம் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பு முதன்முறையாக கேரளமாநிலத்தில் நடிகர் சுரேஷ்கோபி பிஜேபி சார்பில்திருச்சூர் தொகுதியில்போட்டியிட்டு வெற்றிபெற்று மத்தியஅமைச்சராகிவிட்டார். மாநில அரசு மத்திய அரசின் எதிர்பாப்பை வழக்கம் போல் எதிர்பார்க்கும் நிலை வரக்கூடும் ஆளும் கட்சியாக இருக்கும் எங்களுக்கு வாக்களித்தால் தான் இந்த தொகுதி மக்களுக்கு நன்மைகிடைக்கும் என்ற பிரச்சாரத்தில் பிஜேபி ஓரு புறமும் மாநிலத்தில்ஆளும் கம்யூனிஸ்ட்கட்சி எங்களுக்கு வாக்களித்தால் தான் தொகுதி வளர்ச்சியடையும் என்று இருகட்சிகளின் பிரச்சாரத்திற்கு மத்தியில் இந்தியாகூட்டணி சார்பில் போட்டியிடும் பிாிங்காகாந்தி வெற்றிபெறுவாரா? என்பதை தொகுதிமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


இதுகுறித்து அதிமுக தகவல்தொழில்நுட்ப அணி தென்மண்டல துணைத்தலைவரும் தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வக்கீல்மந்திரமூர்த்தி கூறுகையில் ஓரு நாட்டின் வளர்ச்சிதான் மக்களின் வளர்ச்சி என்ற அடிப்படையில் அதிமுக நிறுவனத்தலைவரும் முன்னாள் முதலைமைச்சருமான மறைந்த எம்ஜிஆர் கொண்டுவந்த அந்த கொள்கையின் கோட்டுபாடுகளை உள்ளடக்கி அவர் மறையும் வரை முதலமைச்சராக இருந்து பணியாற்றிய வழியில் ஜெயலலிதாவும் முதலமைச்சராக பணியாற்றி மக்கள் நலனை பேணிகாத்தார். 3ம் தலைமுறையாக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடியார் வழியில் பணியாற்றும் தெற்கு மாவட்ட அதிமுக ெசயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பிசண்முகநாதன் வழிகாட்டுதலின்படி பணியாற்றும் எங்கள் கட்சியின் கொள்ைக மக்களின் வாிப்பணத்தை யாரும் ெகாள்ளை யடிக்க கூடாது மக்களுக்கு நல்லத்திட்டங்களுக்கு சென்றடைய வேண்டும். நாட்டுமக்கள் நன்மையடையவேண்டும். என்ற கொள்கை கோட்பாடுகளுடன் அதிமுக பணியாற்றி வருகிறது. கடந்த காலங்கில் சிலர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களும் உண்டு அதில் வெற்றி பெற்றவர்களும் உண்டு ஆனால் தற்ேபாது உள்ள சூழ்நிலைகளில் எல்லா வகையிலும் செலவினம் ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் மீது நம்பிக்கை வைத்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட வேண்டும். ராகுல்காந்தி வெற்றி பெற்று ராஜினமா செய்ததின் மூலம் விரைவில் நடைபெறவுள்ள வயநாடு தொகுதிக்கு செலவாகும் ஓட்டுமொத்த தொகையும் ராகுல்காந்தியிடம் வசூலிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை அதிமுக சார்பில்கேட்டுகொள்கிறோம் என்று கூறினாா்.

