தூத்துக்குடி
இந்தியா கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரான கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அப்பகுதி 44வது வார்டு திமுக சாா்பில் வட்டச்செயலாளர் சுப்பையா தலைமையில் கனிமொழி வெற்றி சான்றிதழ் பெற்று வரும் பொழுது பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ஒலி பெருக்கி மூலம் கழக பாடல்களை ஓலிக்க செய்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பொியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் 44வது வட்ட நிர்வாகிகள் மணி, சுடலை, குமார், உமா மகேஷ் கணபதி, 35வது வார்டு வட்ட செயலாளர் சிங்கராஜ், 50வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமார், 49வது வாா்டு வட்ட செயலாளர், மூக்கையா, 45 வது வட்டபிரதிநிதி முத்து, பிரையண்ட் நகர் பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

