தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதியின் தேர்தல் முடிவு ஆரம்பத்திலிருந்து முன்னிலை என்ற விகிதத்தில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியினை பெருவார் என்ற நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மதியம் 12 மணிக்கே தூத்துக்குடி மாநகரில் உற்சாகமாக கொண்டாடினர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தற்போது வரை சுமார் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பின்னர் மேயர் கூறும்போது, “தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பெருவாரியான வாக்குகள் அளித்து மிகப் பெரிய வெற்றி பெறச் செய்திட்ட மாவட்ட மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில் திமுக பகுதி செயலாளர்கள், மண்டல தலைவர்கள், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

