தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று அமைச்சர் கீதாஜீவனிடம் போல்பேட்டை அலுவலகத்திலும் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்
41வது வார்க்குட்பட்ட சண்முகபுரம் பிராப்பர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக தகவல் வந்ததையொட்டி அதற்கான காரணங்கள் என்ன என கண்டறியப்பட்டு மார்க்கெட் அருகில் குடிதண்ணீர் வரும் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக வந்ததையடுத்து உடனடியாக பணியாளர்கள் மூலம் மேற்கொண்ட பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நோில் ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கு ஓரு லாாி குடிதண்ணீர் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இதே போல் 49வது வார்டுக்குட்பட்ட ராஜபாண்டி நகர் எம்ஜிஆர் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோாிக்கையைஏற்று தேவையற்ற இடங்களில்இருந்த கருவேல மரங்கள் முள்செடிகளை ஜேசிபி மூலம் தனது சொந்த செலவில் அகற்றும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் வைதேகி, பேபிஏஞ்சலின், வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், முக்கையா, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

