தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கோடைகாலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிதண்ணீர் வழங்குவது குறித்து ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் மற்றும் அதன் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ளும் பிளம்பர்கள் ஓப்பந்த பணியாளா்கள் மத்தியில் பேசுகையில்
கோடைகாலமாக இருப்பதால் ஏற்கனவே குடிதண்ணீர் ெபாதுமக்களுக்கு சூழற்சி முறையில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எந்த பகுதிக்கும் தண்ணீர் வரவில்லை. என்ற குறைபாடுகள் இல்லாமல் சீரான முறையில் வழங்குவதற்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் இந்த பகுதிக்கு தேவைப்படுகின்ற அரசு சார்ந்த எந்த கோாிக்கையாக இருந்தாலும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர்நலன் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் எடுத்துக்கூறி அதை நிறைவேற்றி தருவேன் மக்கள் நலன் தான் நமக்கு முக்கியம் என்று அனைவரும் பணியாற்ற வேண்டும். நம் பகுதியில் தேங்கிய மழைநீரையும் பாரபட்சிமின்றி உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

