தூத்துக்குடி பெரிசன் பிளாசா திரையரங்கில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த புதிய திரைப்படம் சாமானியன் நீண்ட காலங்களுக்கு பிறகு வௌிவந்துள்ளது. பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.
படத்தை காண வருகை தந்த பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட, மாநகர மக்கள் நாயகன் ராமராஜன் தலைமை நற்பணி மன்றம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் காங்கிரஸ் எடிசன் தலைமையில் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
உடன் மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி. மாவட்ட செயலாளர் வேலுமணி, மாநகர மாவட்ட தலைவர் பாலசங்கர், துணை தலைவர் வினோத், செயலாளர் மரியா ஆல்வின், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் ராகுல்கிங், செயற்குழு உறுப்பினர் டார்வின் போஸ்கோ, மாவட்ட செயலாளர் சுரேஸ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

