தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளா் கீதாஜீவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான கீதாஜீவன் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோனிடம் தனது மனுவை அளித்தார். திமுக தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்பி, காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக திமுக வேட்பாளர் கீதாஜீவன், போல்பேட்டை புதிய பேரூந்து நிலையம் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீபோத்தி விநாயகா் ஆலயம் முன்பிருந்து கூட்டணி கட்சியினர், தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். இதில், தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமார் ரூபன், மற்றும் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

