• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல்  வருகை : கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்  பிரபா ஷாமிலி ஜீவா, பூங்கொத்து கொடுத்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார்.

policeseithitv by policeseithitv
April 30, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல்   வருகை : கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்   பிரபா ஷாமிலி ஜீவா, பூங்கொத்து கொடுத்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

கொடைக்கானல், ஏப்ரல்,30

 

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இந்நிலையில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல்

வருகை தந்த போது

கொடைக்கானல் 7 வார்டு நகர் மன்ற உறுப்பினர், வழக்கறிஞர் செல்வி. பிரபா ஷாமிலி ஜீவா, திமுக மூத்த முன்னோடிகளுடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தந்துள்ள நிலையில்

சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post

தூத்துக்குடியில் 4 இடங்களில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

Next Post

நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!

Next Post
நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!

நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In