தூத்துக்குடி
சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு பழமைவாய்ந்த பிரதிபெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவா் செல்வசித்ரா அறிவழகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகாராஜன், பாலகுருசாமி, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, இளைஞர் குழுவை சேர்ந்த அறிவழகன், கோபால், சக்திவேல், தங்கவேல், மீனாட்சிநாதன், மாநகர திமுக வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன், கோவில் அர்ச்சகர் சதாசிவம் குருபட்டர், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

