தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிவன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் செல்வம் பட்டர் தலைமையில் தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலையில் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக காலை அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் – முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரியதேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.45 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
கீழ ரத வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ரூக்மணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா, அறங்காவலர்கள் சாந்தி, ஜெயலட்சுமி, முருகேஸ்வாி, மந்திரமூர்த்தி, ஆறுமுகம், ஜெயபால், மகாராஜன், பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செல்வகுமார், வட்ட செயலாளர்கள் கங்கா ராஜேஷ், சதீஷ்குமார், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ஜாக்குலின்ஜெயா, ஜெயசீலி, முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், லாரிபுக்கிங் அசோஷியேசன் சங்க செயலாளர் சுப்புராஜ், திமுக மாநகர ஆதிதிராவிட நல அணி அமைப்பாளா் பரமசிவம், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருணாதேவி, கலை இலக்கிய அணி துணைஅமைப்பாளர் சோமநாதன், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், திமுக பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பாலசரஸ்வதி சிட்பன்ட்ஸ் பாலகிருஷ்ணன், என்.பி அசோக், தொழிலதிபர்கள் டி.ஏ.தெய்வநாயகம், கமலஹாசன், பிஎஸ்கே மாாியப்பன், கேஎஸ்பிஎஸ் கண்ணன், பிஜேபி மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம், மாவட்ட இந்து முன்னனி செயலாளர் ராகவேந்திரா, அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், அதிமுக மாணவரணி செயலாளர் விக்னேஷ், வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், ஜெ பேரவை துணைச்செயலாளர் திருச்சிற்றம்பலம், எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் டைகர் சிவா, திமுக மணி, ஜோஸ்பா், அல்பட், மாாிமுத்து, பழனி, பாஸ்கா், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழரத வீதியில் இருந்து புறப்பட்ட தேருக்கு முன்பாக யானை, குதிரை அணிவகுப்புகள், களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது.
தேர் திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும், தேரோட்ட பவனிவிழா குழுவினர் மற்றும் திருக்கோவில் பிரதான பட்டர்கள் ஆர்.செல்வம் பட்டர், எம்.சங்கரபட்டர், எம்.சுப்பிரமணிய பட்டர், சி.சண்முகசுந்தரம் பட்டர், மணி பட்டா், சோமசுந்தரம் பட்டா், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுண் டி.எஸ்.பி. தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் 300-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: சிவன்ேகாவிலில் நடைபெற்ற பூஜையில் அமைச்சர் கீதாஜீவன், சாமி தாிசனம் செய்து பக்தர்களோடு காத்திருந்தாா். பின்னர் தேரோட்ட நிகழ்வின் போது அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி, ஆகியோர் வடம்பிடித்து இழுத்ததும் விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா சொல்லி பக்தர்கள் கோஷம் எழுப்பினார்கள். இருதேரையும் வடம்பிடித்த இழுத்து பக்தர்களோடு சாமி தாிசனம் செய்தனர்.

