• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் 500 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்கு பின் அனைவருக்கும் உறுதியாக பட்டா வழங்கப்படும். பிரச்சாரத்தில் கனிமொழி வாக்குறுதி

policeseithitv by policeseithitv
April 16, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஜனநாயக ஆட்சி மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. 17ம்தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குாிய சின்னத்திற்கு வாக்கு சேகாித்து வருகின்றனா்.

இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட மாதாநகர், தாளமுத்துநகா், மற்றும் ஹவுசிங்போர்டு, இந்திராநகர், பகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி வாக்கு சேகாித்து பேசுகையில் இங்கு கூடியிருக்கும கூட்டத்தை பார்க்கும் போது வெற்றி நிச்சயம், என்பது உறுதியாகிவிட்டது. இது பொதுக்கூட்டமா, பிரச்சார கூட்டமா, என்று பார்க்க கூடிய அளவிற்கு அதிக அளவில் கூடியுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி இந்த பகுதிக்கு நான் பலமுறை வந்துள்ளேன், ஆனால் கடந்த ஆண்டு எதிர்பாராத கனமழையால் எல்லோருமே பாதிக்கப்பட்டோம் அப்போது தேங்கிய நீரை வௌியேற்றுவதற்காக சென்னை நெய்வேலி, கோவை, என பல மாவட்டங்களிலிருந்து 100 மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது உங்களோடு நான் இணைந்து என்னால் முடிந்த வரை நல்ல முறையில் பணியாற்றினேன். இனி அது போன்ற நிலை வரக்கூடாது. என்பதற்காக கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு இந்த பகுதியில் புதிதாக வடிகால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இந்த பகுதிக்கு குடிநீர் பஞ்சத்தை தீர்க்கும் வகையில் 500 கோடியில் திட்டம் தயாாிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது அது முழுமையாக நிறைவு பெற்ற பின் மாப்பிள்ளையூரணி உள்பட 363 கிராமப்புற பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வழங்கப்பட்டு அந்த குறைகள் தீர்த்து வைக்கப்படவுள்ளன. அதே போல் இந்த பகுதிக்கு உங்களுடைய கோாிக்கையான பட்டா வழங்க வேண்டும் என்பதையும் நிறைவேற்றும் வகையில் தேர்தல் முடிந்ததும் விடுபட்ட அனைவருக்கும் முதலமைச்சாிடம் கூறி பட்டாக்கள் வழங்கப்படும். என்ற உறுதியை உங்களிடம் நான் அளிக்கிறேன். வரும் நாடாளுமன்ற தோ்தலில் நல்லாட்சி அமைவதற்கு நீங்கள் அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயா் ஜெகன் பொியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், ஓன்றிய செயலாளர் சரவணக்குமார், ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாாி, பொருளாளர் மாாியப்பன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, தர்மலிங்கம், சிவக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாாிமுத்து, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மோி, இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மற்றும் டாக்டர் சிவானந்தன், ஓன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஆனந்தி, ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ராஜேந்திரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், பகுதி செயலாளர் சிவக்குமார், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான ரெங்கசாமி, ஓன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பனி மன்ற தலைவர் பாாி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், பெலிக்ஸ், மகேஸ்வாி, தங்கபாண்டி, கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, முருகன், வேல்ராஜ், நெல்சன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ்:

மாப்பிள்ளையூரணியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது பொதுமக்கள் இது உங்களுக்கு இரண்டாம் தாய்வீடு என்று பேசுங்கள். என்று கோாிக்கை வைத்தனர். அதற்கு கனிமொழி பதிலளிக்கையில் இது எனக்கு இரண்டாம் தாய்வீடுதான் அதனால் தான் இரண்டாவது முறை உங்களை நம்பி தலைவர் என்னை உங்களிடம் ஓப்படைத்துள்ளார். உங்களது அன்பும் பாசமும் எனக்கு தொடர வேண்டும். என்றார். பின்னர் இந்த தொகுதி 99ம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியோடு இருந்த காலத்தில் அப்போது எம்.எல்.ஏவாக இருந்த பொியசாமி சட்டசபையில் பட்டா சம்பந்தமாக பேசப்பட்டு 20.10.2000 ஆண்டில் அப்போது கலெக்டராக இருந்த மாலிக் பெேராஸ்கான் 10 ஆயிரம் பேருக்கு வழங்கினார். அதன் பின் 2006ம் ஆண்டு அமைச்சராக இருந்த கீதாஜீவன் காலத்தில் 5 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதன் பின் அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட வில்லை. அது வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை வைத்தனர். உடனடியாக பேசிய கனிமொழி தேர்தல் முடிந்ததும் நிச்சயமாக விடுபட்டுள்ள அனைவருக்கும் முதலமைச்சாிடம் சொல்லி உறுதியாக பட்டா வாங்கி தருவேன் என்று கூறியதும் விண்ணை பிளக்கும் அளவிற்கு வாழ்க கோஷமும், விசில் சத்தமும் கைதட்டல்களும் விண்ைண பிளந்தன.

Previous Post

ஜனநாயக ஆட்சி மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு

Next Post

தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளையொட்டி படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மாியாதை

Next Post
தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளையொட்டி படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மாியாதை

தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளையொட்டி படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மாியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In