தூத்துக்குடி
இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. 17ம்தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குாிய சின்னத்திற்கு வாக்கு சேகாித்து வருகின்றனா்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, ஆகியோர் முன்னிலையில் கோயில்பிள்ளைநகர், தெர்மல்நகர், கேம்ப் 1, முத்துநகர், ஊரணி ஒத்த வீடு, காதர் மீரான்நகர், ரகுமதுல்லாபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, அந்தோணியார் கோவில் ெதரு, ஜெயலாணி தெரு, பங்காள தெரு, சங்கராபுரம், புதுக்கிராமம், தாமோதரநகா், வண்ணார் தெரு, மேலசண்முகபுரம், கீழசண்முகபுரம், ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்
மாநகர பகுதியில் கடந்த ஆட்சியில் செய்யாத பல பணிகளை செய்துள்ளோம். குறிப்பாக அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி, கால்வாய் வசதி, தட்டுபாடின்றி குடிநீர், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். தமிழக முதலமைச்சர் தளபதியார் தோ்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் 3 ஆண்டுகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற பணிகள் தேர்தல் முடிவுக்குபின் தொடங்கப்படும்.
கடந்த வருடம் பெய்த எதிா்பாராத கனமழையால் வௌ்ளம் ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் 6 தொகுதிகளுக்கும் பாரபட்சமின்றி ஹெலிகாப்டர் இருசக்கர வாகனம் ஜேசிபி டிராக்டர் படகு உள்ளிட்ட பல வாகனங்களில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நோில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை பணிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்து மக்கள்நலனில் அக்கறை கொண்டு உழைத்த கனிமொழிதான் உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மீண்டும் கனிமொழி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் உதயசூாியன் சின்னத்தில் பெருவாாியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடி தரவேண்டும்.
3 ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர் செய்த சாதனைகள் ஏராளம் மழை வௌ்ள காலத்தின் போது நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து பார்வையிட்டு பல அமைச்சர்கள் அதிகாாிகளை முடிக்கிவிட்டு நான்கு நாட்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த நிா்வாகம் இப்போது 3 ஆண்டுகளாக செயல்படுகிறது. மாநகர பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை கால்வாய் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுபட்ட மற்ற பணிகளும் தேர்தல் நடைமுறை முடிந்த பின்பு தொடரும். ஓன்றிய மோடிஅரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மழை வௌ்ளக்காலத்தின் போது வந்த பார்க்க வில்லை. அவருடன் சேர்ந்து கொண்டு எடப்பாடியும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களுக்கும் செயல்களுக்கும் துணை புாிந்து விட்டு இப்போது 2 பேருமே நாடகமாடுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இருவரும் நமக்கு தேவையில்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதின் மூலம் தமிழக மக்கள் நலன் அனைத்தும் சிறப்பாக நடைபெறும் பாரளுமன்றத்தில் கனிமொழியின் குரல் உங்களுக்காக ஓலித்திட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு வாக்களித்து வீணடித்து விடாதீர்கள். இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் சின்னத்துரை, ராபின், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பிரபாகர், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ஏசுவடியான், கவுன்சிலர்கள் மும்தாஜ், பாப்பாத்தி, பேபி ஏஞ்சலின், ராஜதுரை, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், கங்காராஜேஷ், சுரேஷ், செல்வமாாீஸ்வரன், பொன்ராஜ், ராஜாமணி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மதியழகன், சண்முகையா, ஜெயக்குமார், ராஜசேகா், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், ஓவிஆா் முருகேசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, மற்றும் உத்திரபாண்டி, தேன்ராஜ், பொன்ராஜ், சுப்பிரமணியன், ஜெபக்குமார் ரவி, மணி, அல்பட், பலர் கலந்து கொண்டனர். மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிாிவு தலைவர் மைதீன், மக்கள்நீதிமய்யம் மாவட்ட துணைச்செயலாளர் அக்பா், காங்கிரஸ் வார்டு தலைவர் வௌ்ளச்சாமி, உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்:
பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சருக்கு சிறுவர்கள் முதல் பொியவர்கள் வரை மலர் தூவியும் பூரண கும்ப மாியாதையுடன் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்கள் அண்ணாச்சி பொியசாமியின் கோட்டையில் பெண்சிங்கமாக உலா வரும் உங்கள் கோட்டையில் நாங்கள் ஓட்டை விழ விடமாட்டோம். தளபதியாாின் நம்பிக்கை நட்சத்திரம் அக்காவிற்கு துணை நிற்போம். என்று பலர் சூளுரைத்தனர். பிரச்சாரத்தின் போது பல பகுதிகளில் பெண்களின் வேண்டு கோளுங்கிணங்க அவர்களின் குழந்தைகளை தூக்கி முத்தம் கொடுத்தார். சில பகுதிகளில் சிறுவர்கள் எங்கள் ஓட்டு உதயசூாியனுக்கே என்ற பதாகைகளை வைத்து வரவேற்றனர்.

