தூத்துக்குடி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி முதலமைச்சா் ஸ்டாலின் சாதனைகளையும் கனிமொழி இந்த ெதாகுதியில் செய்த பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து திமுக துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் வியாபாாிகள் பாதசாாிகள் செல்லும் வழயில் உள்ள கோவில், தர்கா, தேவாலயம், உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக வாக்கு சேகாித்து பல இடங்களில் தேநீர் அருந்தி அவா்களது தொழில் மற்றும் நலம் குறித்து மக்களோடு மக்களாக அமர்ந்து வாக்கு சேகாித்து வரும் நிலையில் போல்டன்புரம் கக்கன்பூங்காவில் நடைபயிற்சிக்கு வந்தவர்களிடமும் பின்னர் போல்டன்புரம் சுப்பையாபுரம் பிரையண்ட்நகர் அம்மன்கோவில்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேயா் ஜெகன் பொியசாமி தீவிரமாக வாக்கு சேகாித்தார்.
கவுன்சிலர் விஜயலட்சுமி, மாவட்டதொண்டரணி அமைப்பாளா் ரமேஷ், மாநகர ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபால், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், இசக்கிமுத்து, பொியசாமி, மாவட்ட தொண்டரணி துைண அமைப்பாளர் ராமா், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, வட்டச்செயலாளர் சரவணன், வட்டப்பிரதிநிதி துரை, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளா் ஆவுடையப்பன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, முன்னாள் வட்டச்செயலாளர் மாாியப்பன். மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், கண்ணன், லிங்கராஜா, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், காங்கிரஸ் மண்டலத்தலைவர் ராஜன், வியாபாாிகள் சங்க தலைவர் மார்க்கஸ், உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த பலா் உடன் சென்றனர்.

