• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமையில் இளைஞர்கள் பட்டாளம் வெள்ளை சீருடை அணிந்து மிக பிரம்மாண்ட வரவேற்பு..

policeseithitv by policeseithitv
April 13, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமையில் இளைஞர்கள் பட்டாளம் வெள்ளை சீருடை அணிந்து மிக பிரம்மாண்ட வரவேற்பு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றதொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக கனிமொழி கருணாநிதி களமிறங்கி உள்ளார்.அவரை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று 12/04/24 கோவில்பட்டியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு 8மணிக்கு
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியான டேவிஸ்புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே
கனிமொழி கருணாநிதிக்கு
ஆதரவாக
தேர்தல் பரப்புரைக்காக
அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் வருகை தந்தார்
தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பெயரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மேற்பார்வையில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார்
தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் வெகு சிறப்பாக ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 30,000 பொதுமக்கள் பங்கேற்ற
இந்த மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்ட
உதயநிதி ஸ்டாலின்
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் காணப்பட்டனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களில்
தூத்துக்குடியில் நடந்த
இந்த பிரச்சாரக் கூட்டம் மாநாடு போல் காட்சி அளிக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்
கனிமொழி கருணாநிதியை சுமார் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம் பி என்ற பெயரை நீங்கள் பெற்றுத் தர வேண்டும். இன்னும் 5 தினங்கள் இங்குள்ள மக்கள் இப்பொழுது உள்ள எழுச்சியோடு செயல்பட்டால் நூறு சதவீதம் அல்ல ஆயிரம் சதவீதம்
கனிமொழி கருணாநிதி அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பேசினார் . மேலும் கலைஞரின் உடன் பிறப்புகளான
நீங்கள் ஒவ்வொருவரும் உதயசூரியனுக்கு அளிக்கும் வாக்கு பதிவு பிரதமர் மோடியை விரட்டும் வாக்குகளாக அமையும் என்று தெரிவித்தார். மேலும் கேஸ் சிலிண்டர் விலை ரூ 400 க்கு விற்றது இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஒன்றிய அரசு தான் முழு காரணம்
அனைத்து விலைவாசிகளும் குறைய இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுகிறேன் என்று அடிக்கல் நாட்டியதோடு சரி இன்று வரை அந்த பணிகள் நடைபெறவில்லை
இது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த சமயம் ஒன்றிய அரசு இந்த அடிக்கல்லை நாட்டினர் ஆனால் இன்று வரை எந்தப் பணிகளும் நடக்கவில்லை
என்று பேசிய அவர் இந்த செங்கல் எய்ம்ஸ் மருத்துவமனை
அடிக்கல் நாட்டும் போது வைத்தது இதனை நான் எடுத்து வைத்திருக்கிறேன். இந்த செங்கலை எய்ம்ஸ் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடிக்கும் போது தான் கொடுப்பேன் என்று தெரிவித்தார். இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூட்டத்தில் இருந்த இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் தொண்டர்கள் என அனைவரும் கரகோஷம் எழுப்பினர். நான் தமிழகம் முழுவதும் இதுவரை 32 தொகுதிகளுக்கு
பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளேன் ஆனால் மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெறுகின்றஇந்த தேர்தல் பிரச்சார கூட்டம் பார்க்கும் பொழுது எனக்கு
என்ன தோன்றுகிறது என்றால் இது ஒரு வெற்றி மாநாடு கூட்டமா? அல்லது நன்றி தெரிவிக்கும் கூட்டமா? என என்ன தோன்றுகிறது. அந்த அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது அதுபோல் இங்குள்ள மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் என்று பேசினார்.
இந்த சிறப்புமிக்க வரவேற்பு ஏற்பாடுகள் செய்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கிழக்கு ஒன்றிய செயலாளர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மற்றும் ஏனைய ஒன்றி செயலாளர்கள் திமுக நிர்வாகி கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
என்று தெரிவித்தார்.
கடல் அலையா?
அல்லது மக்கள் கூட்டமா என மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த அளவிற்கு உங்கள் சிறப்புமிக்க வரவேற்புகளுக்கு மிக்க நன்றி என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை 80 சதவீதம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகை வரப்பெராதவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார் இந்தக் கூட்டத்திற்கு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உமரி சங்கர்,
பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி அரசு வழக்கறிஞர் பூங்குமார், சுதா ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, மகளிர் தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய கவுன்சிலர் சேவியர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின்,
இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் சிலுவைப்பட்டி பாரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பானி முத்து, ராமலிங்கம், சிவக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ் ஆர் கணேசன், ராமச்சந்திரன், வசந்தகுமாரி, ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், மகளிர் அணி ஜெசிந்தா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜீவா பாலமுருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்க மாரிமுத்து, யூனியன் கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஜேசுராஜா, தங்கப்பாண்டி, சக்திவேல் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், இளைஞரணி கௌதம், ஒன்றிய இளைஞரணி அவைத்தலைவர் ஜோசியர் முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர், ஒன்றிய மகளிரணி, இளைஞரணி மற்றும் கூட்டணிக்கட்சியினர் உள்பட பலர் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமையில் இளைஞர்கள் பட்டாளம் வெள்ளை சீருடை அணிந்து மிக பிரம்மாண்ட முறையில் வரவேற்பு கொடுத்தது மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை முன்னின்று சிறப்பாக செய்த
கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமாரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் திமுக மாநில நிர்வாகிகள் பலரும் பாராட்டினர். இந்த எழுச்சிமிகு வரவேற்பில் இளைஞர்கள், மகளிர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பெருந்திரளான பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி வாக்கு சேகாித்தார்.

Next Post

21ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம் 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு ேசகாித்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளாசல் 

Next Post
21ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம் 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு ேசகாித்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளாசல் 

21ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம் 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு ேசகாித்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளாசல் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In