தூத்துக்குடி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கனிமொழிக்கு தீவிர வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கயத்தாறு மத்திய ஓன்றியத்திற்குட்பட்ட இலந்தைகுளம் கிராமத்தை சோ்ந்த மாற்றுக்கட்சியினர் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் வடக்கு இலந்தைகுளம் அதிமுக கிளைச்செயலாளர் செல்லத்துரை தலைமையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் கீதாஜீவன் சால்வை அணிவித்து நடைபெறவுள்ள தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் ஐய்யாத்துரைபாண்டியன், பிாியா குருராஜ், கடம்பூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் நாகராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணைச்செயலாளர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி மாாிச்சாமி, வக்கீல் மாாியப்பன், ராஜா, மற்றும் பால்ராஜ், ஜெனி, ெபருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

