தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர், அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் 20வது வார்டுக்குட்பட்ட நந்தகோபாலபுரம் பகுதியில் புதியபேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தன, இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீல் ஓதுக்கீடு செய்யப்பட்டு புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ெதாடங்கி வைத்து ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாநகராட்சி பொறியாளர் சரவணன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தர் வட்டச்செயலாளர் ரவீந்திரன், மாநகர கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், வட்டப்பிரநிதி அருணகிாி, ெபருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, பாஸ்கா், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் 14வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீல் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இதில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்ட செயலாளர் காளிதுரை, வட்டப்பிரதிநிதிகள் கோவிந்தராஜ், மீனாட்சி சுந்தரம், மற்றும் நிா்வாகிகள் நடராஜன், அந்தோணி, மகேஷ், செல்வக்குமார், பாலசுப்பிரமணியன், கண்ணன், சரத்குமாா், மோகன், மகளிர் அணி மாாிச்செல்வி, சுமதி, நந்தினி, சுடலி, தங்கம், ஆனந்தி, செல்வி, சாந்தி, உள்பட பலா் கலந்து கொண்டனர்.

