தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர் , அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தன, இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டு முத்து கிருஷ்ணாபுரம் 6வது தெருவில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ெதாட்ங்கி வைத்து ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணியை செய்ய வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தர், கவுன்சிலர் தனலட்சுமி, வட்டப்பிரநிதி பாஸ்கர், ெபருமாள் கோவில் அறங்காவலர் குழ தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, பாஸ்கா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

