தூத்துக்குடி
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களிலும், பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி வணங்கினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாவட்டம் முழுவதும் திமுக சாதனை விளக்க பாடல்கள் ஆட்சி சாதனையின் துண்டு பிரசுரங்களை வீதிதோறும் வழங்கி நலத்திட்ட உதவிகளுடன் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோளின்படி 20வது வார்டுக்குட்பட்ட செல்வநாயகபுரம், நந்தகோபாலபுரம் மெயின் பகுதியில் வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் ஆகியவற்றை வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பெரியசாமி, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், வட்ட செயலாளர் முனியசாமி மற்றும் அருணகிரி, செந்தூர்பாண்டி, கணேசன், இசக்கி, குமாஸ்தா பாலசுப்பிரமணி, பகுதி சபா உறுப்பினர் சிவசுந்தர், ராஜ்குமார், மந்திரம், தங்கபாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

29வது வார்டு சார்பில் பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் வட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் பட்டா வெடித்து இனிப்புகள் வழங்கி சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், வட்ட பிரதிநிதிகள் காதர்மைதீன், அன்பரசன், சரவணக்குமார், குமரன், மாநகர அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் திலகராஜ், சேர்மதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம் முன்பு மாநகர தொழிலாளரணி அமைப்பாளர் முருக இசக்கி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர நாராயணன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, மாநகர சிறுபாண்மை அணி துணை தலைவர் செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதி சுந்தரேசன், மற்றும் தங்கம், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் நெல்சன், பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

