• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாலுமாவடி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்!  சகோ. மோகன் சி.லாசரஸ் ஜெபித்து துவக்கி வைத்தார். கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

policeseithitv by policeseithitv
February 19, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாலுமாவடி  புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்!   சகோ. மோகன் சி.லாசரஸ் ஜெபித்து துவக்கி வைத்தார்.  கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாசரேத், பிப்,19

நாலுமாவடி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நாலுமாவடி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை சேவை மனப்பான்மையுடன் குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவ

மனையில் 24 மணி நேர மகளிர் மற்றும் மகப்பேறு நோய் சிறப்பு மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிறப்பு சிகிச்சைபிரிவு, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, உடலியக்க மருத்துவ பிரிவு, ஐ.சி.யூ. வசதி உள்ள ஆம்புலன்ஸ் வசதி, 24 மணி நேர மருந்தகம் வழங்கும் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

எக்கோ கார்டியோகிராம், இசிஜி, எக்ஸ்ரே, அனைத்து வசதிகள் கூடிய ஆய்வகம், ஸ்கேன் வசதி, அனைத்து வசதிகள் கூடிய பிரசவ அறை, அவசர சிகிச்சை பிரிவு, அவசரப் பிரிவு, ஏ.சி. மற்றும் நான் ஏ.சி.அறைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி பொது வார்டுகள், 24மணி நேர உறைவிட மருத்துவர் கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவு, சிறப்பாக பயிற்சி பெற்ற செவிலியர்கள், கேண்டீன் வசதிகள் ஆகியவை குறைந்த கட்டணத்தில் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இம் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.

நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை சகோ. மோகன் சி.லாசரஸ் ஜெபித்து துவக்கி வைத்தார். மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர்

அன்புராஜன் வரவேற்று பேசினார்.

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை மெடிக்கல் சூப்பிரண்டு டாக்டர் விமல் ஜோசப், இருதய நோய் மருத்துவர் சந்திரகுமார், குழந்தைகள் நல மருத்துவர் டேனியல்ராஜ், பொது மருத்துவர் ஷெரின் ஜானகி, மகப்பேறு மருத்துவர் ஜெயசுதா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி சிகிச்சைகள் அளித்து இலவச மருந்துகளை வழங்கினர்.

மேலும் டாக்டர் பிரேம்குமார் தலைமையில் அகர்வால் கண் மருத்துவ மனைகுழுவினர் இலவசமாக கண்சிகிச்சை அளித்தனர். முகாமில் நாலுமாவடியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இலவச மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் கிளமெண்ட் எபனேசர்பால் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர்கள் டேவிட் பாஸ்கரன், மருதநாயகம் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அலுவலர்கள் செய்திருந்தனர்.

Previous Post

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணி விறுவிறுப்பு : ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் சண்முகையா, எம்.எல்.ஏ, பஞ்.தலைவர் சரவணகுமார்   தலைமையில் பூத் கமிட்டி, பாக முகவர் களுடன் முக்கிய ஆலோசனை

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In