தூத்துக்குடி
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் அட்டை வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கையொப்பமிட்ட திமுக உறுப்பினர் அட்டைகளை கலைஞர் அரங்கில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ முன்னிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் விளாத்திகுளம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி புதூர் பேரூர் செயலாளர் மருதுபாண்டியன் எட்டையாபுரம் பேரூர் செயலாளர் பாரதிகணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் எட்டையாபுரம் பேரூர் துணைச் செயலாளர் மாரியப்பன், எட்டையாபுரம் பேரூர் வார்டு செயலாளர் பிச்சை எட்டையாபுரம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

