தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு 6 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய 6 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கையை, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
* அம்மா இல்லம் என்ற திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா
* வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி
* அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்
* விலையில்லா கேபிள் டிவி இணைப்பு
* ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
* இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
* மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை
* நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
* பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை
* மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை பின்பற்றப்படும்
* மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்
* கல்விக்கடன் ரத்து செய்யப்படும்
* ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்