தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பலர் குடியிருப்பின் மேல்பகுதியில் தங்கியுள்ளனர். சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் அம்பேத்கார் நகர், குமரன்நகர், இபி காலணி, ஸ்டேட்பேங்க் காலணி, முத்தம்மாள் காலணி, லூர்த்தம்மாள்புரம் கிழக்கு, மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையம், ஆகிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பக்கிள் ஓடை மற்றும் கால்வாய் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றார்.
பின்னர் தபால் தந்தி காலணி, இந்திராநகர், திருவிகநகர் பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மகிழ்ஜான், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், ரெங்கசாமி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, நிர்வாகிகள் சீனிவாசன், ஐயப்பன், செல்வம், லயன்ஸ் ராஜன், வட்டச்செயலாளர் செல்வராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

