• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஊடகத்துறையினருக்கு   நிவாரணப் பொருட்கள் வழங்கல் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வழங்கினார்!!  நன்றி தெரிவித்த பத்திரிகையாளர்கள்

policeseithitv by policeseithitv
December 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஊடகத்துறையினருக்கு    நிவாரணப் பொருட்கள் வழங்கல் :  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வழங்கினார்!!   நன்றி தெரிவித்த பத்திரிகையாளர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி டிசம்பர்,23

 

வரலாறு காணாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டு உள்ளது. இந்த மழை வெள்ளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்து உள்ளதோடு பெரும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்க வைக்கும் இந்த சோகம் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மனதில் இருந்து மறைவதற்கு பல காலம் ஆகும் என்பது தான் உண்மை. அத்தகைய மீளா துயரில் தூத்துக்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் மழை வெள்ளம் பாதிப்புகளை வெளியே கொண்டு வருவதிலும் உண்மையான தகவல்களை அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிப்பதில் இரவு பகல் பாராது மழை வெள்ளத்தில் சற்றும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களின் நிலையை தயவு செய்து அறிவார்ந்வர்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏராளமான பத்திரிகையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஐந்து நாட்களுக்கு மேலாகிவிட்டது தங்கள் மனைவி குழந்தை எப்படி இருக்கிறார்கள் என்ற நிலை கூட தெரியாமல் செய்தி சேகரிப்பில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெரும்பாலானவர்களின் வீடுகளும் உடமைகளும் தண்ணீரில் மிதந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படவில்லை பொதுமக்கள் நலன் தகவல்களை தெரிவிப்பது என்பது மட்டுமே இவர்களது குறிக்கோளாக இருக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், சீமான், அன்புமணி ராமதாஸ், வைகோ, மற்றும் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவித்த தகவல்களையும் பெரிய அளவில் பாதிப்படைந்த இடங்களை மீடியாக்கள் மூலம் எடுத்துக்காட்டி வரும் செய்தியாளர்களின் பணி என்பது மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது

மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் செய்தி சேகரிக்க சென்ற பொழுது காயம் அடைந்த செய்தியாளர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். கேமரா போன்றவைகளை பறிகொடுத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இவ்வாறு துயர் உற்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை அவர்கள் பணியாற்ற நிறுவனம் கண்டுகொண்டு உதவிகள் செய்யுமா என்பது கேள்விக்குறிதான். ‘ எனவே இந்த சமயத்தில் எல்லோருக்கும் உதவும் அரசுதான் இந்த பத்திரிக்கையாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். பொதுமக்களுக்கு அறிவித்த நிவாரண உதவி போல் இந்த மழை வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து பாடுபட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்.என தூத்துக்குடி

பத்திரிகையாளர்கள்

கோரிக்கை வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடி பத்திரிகையாளரின் கோரிக்கையை உடனே அறிந்த

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா,

இன்று மதியம் ஒரு மணி அளவில் தூத்துக்குடி பிரையன்ட் நகர் ஐந்தாவது தெருவில் இருக்கும் காமராஜ் மண்டபத்தில் வைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூத்துக்குடி மாநகர மக்களுக்கு

15 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில், அரிசி மசாலா பொருள்கள் உள்ளிட்ட

நிவாரண உதவி வழங்கினார். இந்த நிகழ்வுகளை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை பார்த்து இந்த பேரிடர் காலகட்டத்தில் இரவு பகல் தூங்காமல் பொதுமக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து விளங்கும் தங்களது பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது

தங்களது உடைமைகளையும் குடும்பங்களையும் மறந்து முழு நேரமாக செய்தி சேகரித்து வரும் தங்களுக்கு எங்களது அமைப்பு சார்பில் ஒரு சிறிய உதவி அதனை தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என விக்கிரமா ராஜா தெரிவித்து பத்திரிக்கையாளர்களுக்கு 15 தினங்களுக்கு பயன்படுத்தும் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வியாபாரி சங்க தலைவர் விக்கிரம ராஜாவுக்கு நன்றி தெரிவித்தனர் .

Previous Post

தூத்துக்குடி மக்களுக்கு உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

Next Post

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In