நாசரேத், டிச.23:
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புறையூர், மணத்தி, மேலக்கல்லாம்பாறை, கீழக்கல்லாம்பாறை, குருகாட்டூர், குட்டித்தோட்டம், நல்லூர், சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட கிராமத்தினர் 10 ஆயிரம் பேருக்கு 3 வேளை சாப்பாடுகளை
நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் மற்றும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையினர் வழங்கினர்.
கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை விடாது பெய்த மழையி னால் குளங்கள் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர்வெள்ளமாக சென் றதால் அப்பகுதிமக்கள் வசி க்கும் வீடுகளில் வெள்ளம் புகுந்து ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட தூத்துக்குடி மாவட்டம்,நாலு மாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழியம், புது வாழ்வு சங்கம், நல்ல சமாரியன் சங்கம் ஆகியவற்றின் நிறு வனருமான சகோ. மோகன் சி. லாசரஸ் உத்தரவின் பேரில் இயேசு விடுவிக்கி றார் ஊழியர்கள்,புது வாழ்வு சங்க நிர்வாகிகள், நல்ல சமாரியன் சங்க உறுப்பினர்கள் கிராம் மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி வருகின்ற னர்.உணவு தயாராகுவதையும், பாதிக்கப்பட்ட கிராமங்களையும்
சகோதரர் மோகன் சி.லாசரஸ் நேரில் வந்து பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

