தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம், பல்வேறு கிராமங்களில் உள்ள கன்மாய்கள் உடைப்பு ஏற்பட்டது. இது கூடுதல் பாதிப்பாக அமைந்தது.
கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகளை சந்தித்து அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டும் சில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பலர் குடியிருப்பில் மேல்பகுதியில் தங்கியுள்ளனர். சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, முழுமையாக எல்லா பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசு சிறப்புஅதிகாரிகள் குழு நியமித்துள்ளது. அக்குழுவோடு பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும் எல்லா பகுதிகளுக்கும் சென்று முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்னையிலிருந்து விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவர் பின்னர் கார்மூலம் மறவன்மடம் அந்தோணியார்புரம் பகுதிகளை பார்வையிட்டு தூத்துக்குடி மாநகராட்;சி பகுதிக்குட்பட்ட மில்லர்புரம் மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண உதவியாக பாய் போர்வை பிஸ்கட் குடிதண்ணீர்பாட்டில் அரிசி வேஷ்டி உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை 600 பேருக்கு வழங்கினார்.
பின்னர் குறிஞ்சிநகர். போல்பேட்டை, 3ம்கேட் மேம்பாலம், ஆகிய பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, வேலு, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, மனோதங்கராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் லட்சுமிபதி, எஸ்.பி பாலாஜி சரவணன், ஆணையர் தினேஷ்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஜோதிநிர்மலா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கூடுதல் தலைமை செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா, மணி, பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், செய்திமக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் பாஸ்கர், நவீன்பாண்டியன், முத்துக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

