தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் வடிகால் பாசனகுளங்களில் ஒன்று குலையன்கரில் பொட்டல்குளம். இந்த குளம் வழியாக கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. கோரம்பள்ளம் குளம் நிரம்பியதும் மீதமுள்ள தண்ணீர் 24 மதகு கண்மாய் வழியாக கடலுக்கு திறந்துவிடுவது வழக்கம்.
தற்போது பெய்துள்ள கன மழையினால் குலையன்கரில் அருகே குளக்கரையில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விவசாய நிலங்கள் வழியாக ரத்தினபுரி, பாண்டியாபுரம், குலையன்கரில், பொட்டல்காடு உள்ளிட்ட ஊர்களுக்குள் புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப் பெறாமல் தவித்து வருகின்றனர்.

