• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் மூலம் ஸ்டெர்லைட் ரூ.1 கோடி நிவாரண உதவி

policeseithitv by policeseithitv
December 17, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டதோடு, பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உடனே களத்தில் இறங்கியது.

சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வருவதில் ஈடுபாடு காட்டி வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதற்குத் தேவையான வசதிகளை ஒருங்கிணைத்தது. கார்கில் நகர், திருவொற்றியூர், அத்திப்பட்டு புதுநகர் ஆகிய இடங்களில் தனித் தனி உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பகுதிகளில் தேவைப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிப் பொருட்கள் இரவு பகல் பாராமல் கொண்டு சேர்க்கப்பட்டன.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், சுத்தமான குடிநீர், படுக்கை விரிப்புகள், சுகாதார பெட்டகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டன. மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுடைய உடனடி தேவைக்கேற்ப, இவை உரிய நேரத்தில் உரிய முறையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

மேற்கண்ட பகுதிகளில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிவாரண முகாம்கள் மூலம், 4,000 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரண உதவிகள், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் போய்ச் சேருவதற்கான வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக, குழந்தைகள், முதியோர், சிறப்புத் தேவையுடையோருக்கு, இந்த இடர்காலத்தில் தேவைப்படும் உதவிகள் கிடைக்குமாறு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஏ. சுமதி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிய உதவிகள் போய்ச் சேர்வதில், இந்நிறுவனம் எவ்வளவு கவனத்தோடு இருக்கிறது என்பதை விளக்கினார். ‘மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டு மனம் கலங்குகிறது. இடர்கள் ஏற்படும் போதெல்லாம் தமிழ்நாட்டுடனும் தமிழர்களுடனும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் என்றும் துணை நிற்பதில் உறுதியாக இருக்கிறது. நாங்கள் வழங்கும் நிவாரணம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் உடனடி உதவியாகும். இதன் மூலம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக்கொள்ள முடியும், மீட்பு நடவடிக்கையிலும் மறுவாழ்வு முயற்சிகளிலும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறது. உள்ளூர் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து உதவுவோம்’ என்று தெரிவித்தார்.

Previous Post

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ரெடீமர்ஸ் கிளப் நடத்தும் மாரத்தான் போட்டிகள்! டிச.29 ம் தேதி நடக்கிறது.

Next Post

மோடி, அமித்ஷாவுக்கு நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் பற்றி கவலையில்லை – தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் அறிக்கை

Next Post
மோடி, அமித்ஷாவுக்கு நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் பற்றி கவலையில்லை – தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் அறிக்கை

மோடி, அமித்ஷாவுக்கு நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் பற்றி கவலையில்லை - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் அறிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In