சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டதையடுத்து எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான அரிசி, சேலை, போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி, சென்னை 185வது வார்டு உள்ளகரம் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பின்னர் அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
இதில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சென்னை மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான ஜே.கே.மணிகண்டன், 185வது வார்டு வட்ட செயலாளர் திவாகர், மாமன்ற உறுப்பினர் சர்மிளாதேவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், விளாத்திகுளம் பேரூர் வார்டு செயலாளர் தமிழரசன் மற்றும் அல்பட் உட்பட பலர் உடனிருந்தனர்.

