தூத்துக்குடி.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் வு.ஜெயக்கொடி சோனியாகாந்தி பிறந்தநாள் விழா கேக் வெட்டினார்.
நிகழ்ச்சியில் டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், எஸ்.டி.பிரிவு மாநிலச் செயலாளர் ஐ.என்.டி.யூ.சி முனியசாமி, எஸ்.சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, மீனவரணி மிக்கேல் குரூஸ், சேகர், சுரேஷ்குமார், செல்வம், பேரையா, தெர்மல் முத்து, ஜான் வெஸ்லி, முருகேசன் கதிரேசன், சேவியர் மிஷியர்,அமைப்புசாரா தொழிலாளர் சுந்தர்ராஜ், கன்னிச்சாமி பாண்டியன், ஷேக்ஷ் பியர், கதிரேசன், ஐ.என்.டி.யூ.சி-யை சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, கிரிதரன், பாலன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

